சின்னத்திரை தொடர்களில் நடித்தன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அஸ்வின் குமார். 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சி அவருக்கு மாபெரும் புகழைப் பெற்று தந்தது. இதன் காரணமாக அவரது தனிப் பாடல்கள் யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்றது.
இதையும் படிக்க | ''சாதி அரசியல் செய்பவர்களுக்கு சூர்யா மீது பயம் இருக்கத்தான் செய்யும்'' : சூர்யாவுக்கு வலுக்கும் ஆதரவு
இந்த நிலையில் அவர் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி, அவந்திகா மிஷ்ரா ஆகியோர் நடித்துள்ளனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரிடென்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவிந்திரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து கியூட் பொண்ணு என்ற பாடல் வெளியாகியுள்ளது. அறிவு எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் மற்றும் விவேக் சிவா பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.