'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இதில் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாருக்கும் அஞ்சேல்' விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இவர் தனது அடுத்தப்பட அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
இதையும் படிக்க | 'மாநாடு' படத்துக்கு சிக்கல்: ''உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இது முதல்முறை'': தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் வருத்தம்
'மைக்கேல்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.