மத ரீதியான பிரச்னைகளை பேசும் படமா சசிகுமாரின் 'அயோத்தி'?: புகைப்படங்கள் இதோ
சசிக்குமாரின் அயோத்தி படத்தின் துவக்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
'சுந்தரபாண்டியன்' படத்துக்குப் பிறகு இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள 'கொம்பு வச்ச சிங்கம்டா' மற்றும் 'ராஜவம்சம்' படங்கள் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனயைடுத்து 'பகைவனுக்கு அருள்வாய்' என்ற படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சசிக்குமார் நடிக்கும் 'அயோத்தி' என்ற படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவிந்திரன் தயாரிக்க, மந்திர மூர்த்தி இயக்குகிறார். இந்தப் படத்தில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ், போஸ் வெங்கட், யஷ்பால் ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க | நடிகர் தனுஷுக்கு மீண்டும் கைகொடுக்குமா சிவாஜி படத் தலைப்பு ?
Advertisement
இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அயோத்தி என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்தப் படம் அதிக கவனம் பெற்றுள்ளது. சமூகத்தில் நிலவும் மத ரீதியான பிரச்னைகளை பேசும் படமாக அயோத்தி படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.