முகப்பு
செய்திகள்

'வாருங்கள் சீக்கிரம்': கமல்ஹாசன் குணமடைய இளையராஜா வாழ்த்து

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமாக வரவேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:32 AM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமாக வரவேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டி இளையராஜா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் ட்விட்டர் பதிவு:

"நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்."

முன்னதாக, இன்னமும் நோய்ப் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →