செய்திகள்

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறப்போவது பாவனியா? ஏன் ?

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாவனி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

DIN

சுவாரசியமே இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. வைல்டு கார்டு மூலம் அபிஷேக் ராஜா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். மேலும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் நடன இயக்குநர் அமீர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்துள்ளனர். 

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேர பிரியங்கா, தாமரை, நிரூப், இமான், பாவனி, ஐக்கி பெர்ரி என 6 பேர் நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் பாவனியும், தாமரையும் மிகக் குறைவான வாக்குகள் பெற்றுள்ளனராம். எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு குறைவு. அவருக்கு பதிலாக வேறு யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கமலின் உடல் நிலை ஓரளவுக்கு சரியானால் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT