முகப்பு
செய்திகள்

திரைப்பட கதாநாயகனாகும் சன் டிவி சீரியல் நடிகர்

நாயகி, ரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்த விஜித் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

சன் டிவியில் கிருஷ்ணா - சாயா சிங் ஜோடியாக நடித்து வந்த 'ரன்' தொடரில் வில்லனாக நடித்து மிரட்டியவர் விஜித் ருத்ரன். இவரது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலானது.

இந்த நிலையில் இவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலானது, நான் ஒரு படத்தில் கதாயகனாக நடித்துள்ளேன். இந்தப் படத்துக்கு டைட்டில் எனப் பெயரிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்தப் படத்தின் படப்படிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும். இந்தப் படத்தில் விஜித்திற்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். விஜய் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் மைம் கோபி மற்றும் மாரிமுத்து ஆகியோர் வில்லன்களாக நடிக்க, ரோபோ ஷங்கர், மதுமிதா, ரேகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.