செய்திகள்

சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர்: வெளியான ப்ரமோ விடியோ

சர்வைவர் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகர் இனிகோ பிரபாகரன் மற்றும் வனேஷா ஆகியோர் புதிதாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

DIN


சர்வைவர் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் நடிகர் இனிகோ பிரபாகரன் மற்றும் வனேசா ஆகியோர் புதிதாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

ஜி தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி தற்போது சுவாரஸியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஆகியோர் வெளியேறினர்.  

நேற்றைய நிகழ்ச்சியில் காடர்கள் தீவில் இருந்து படகின் மூலம் மீண்டும் தனது தீவுக்குத் திரும்பினார் நந்தா. வேடர்கள் தீவில் உற்சாக வரவேற்பு கிடைத்தது. காடர்கள் தீவு குறித்து அங்கிருப்பவர்கள் கேட்க, அவர்கள் இம்யூனிட்டி சவாலில் வெற்றிபெற வேண்டும் என்ற வெரியில் இருப்பதாக சொன்னார். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு போட்டியாளர்கள் இணையவுள்ளனர். அதற்கான புரோமோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் இனிகோ பிரபாகரன் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் நடிகை வனேசா ஆகியோர் புதிதாக கலந்துகொள்ளவிருப்பதாக காட்டப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் மேலும் விறுவிறுப்பு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT