செய்திகள்

ருத்ர தாண்டவம் படம் பார்த்து அஜித்தின் மனைவி ஷாலினி பாராட்டு: இயக்குநர் பகிர்ந்த புகைப்படம்

ருத்ர தாண்டவம் படம் பார்க்க வந்த நடிகை ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

ருத்ர தாண்டவம் படம் பார்க்க வந்த நடிகை ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

திரௌபதி படத்துக்குப் பிறகு மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படம் நேற்று (அக்டோபர் 1) வெளியானது. போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் சாதி, மத பிரச்னைகளைப் பற்றி பேசியிருக்கும் இந்தப் படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றுள்ளது. 

இந்தப் படத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ரிச்சர் ரிஷி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜூபின் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் கதாநாயகன் ரிச்சர்டு ரிஷி, நடிகை ஷாலினியின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் நடிகை ஷாலினி ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மோகன்.ஜியை பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சாதி, மத ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்ற படத்தைப் பார்த்துள்ளதாக நடிகை ஷாலினி குறத்து ஒரு சிலர்  கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT