செய்திகள்

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள உடன்பிறப்பே முன்னோட்டம் வெளியானது!

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

DIN

சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள உடன்பிறப்பே திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி புரொடக்சன்ஸ் சார்பாக தயாரித்துள்ள படம் உடன் பிறப்பே. இந்தப் படத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். 

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். யுகபாரதியும் சினேகனும் இந்தப் படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக அமைந்துள்ளதை கணிக்க முடிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT