செய்திகள்

பிக்பாஸை கடுமையாக விமர்சித்த பிரபலம், இப்பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள்: வெளியான விடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாக விமரிசிக்கும் அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கடுமையாக விமரிசிக்கும் அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களைப் போல் அல்லாமல் இந்த முறை பெரும்பாலான போட்டியாளர்கள் புதியவர்கள். இதனால் ஆரம்பத்தில் மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் குறைவாக இருக்கிறது. 

இந்த சீசனில் யூடியூபில் சினிமா விமரிசனம் செய்யும் அபிஷேக் ராஜா கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையாக விமரிசிக்கும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த விடியோவில், ''என் கண்ணால் காண்பதைக் கூட நம்ப முடியவில்லை. ஊருக்கே தெரியும் உங்களைக் கேமரா கொண்டு படம்பிடிக்கிறார்கள் என்று. ஆனால், கிடைத்த நூறு நாட்களில் நீங்கள் முதல்வராக செய்யும் வேலை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. கேட்டால் பிக்பாஸ் என்கிறார்கள்'' என்று கடுமையாக விமரிசிக்கிறார்.

இதில், நீங்கள் முதல்வராக செய்யும் வேலை என கமல்ஹாசனை அவர் விமரிசிப்பதாகவும் ஒரு சிலர் குறிப்பிட்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமரிசித்துவிட்டு பின்பு ஏன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றீர்கள் என அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமரிசித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT