செய்திகள்

'சிவப்பு மஞ்சள் பச்சை' பட கதாநாயகிக்கு திருமணம்: வெளியான புகைப்படங்கள் வைரல்

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவருக்கு அருண் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

DIN

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவருக்கு அருண் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக இவர் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற மைலாஞ்சி பாடல் மிகப் பிரபலம்.

இதனையடுத்து அவர் தீதும் நன்றும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்தப் படத்தில் அவருடன் அபர்னா பாலமுரளியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ரசு ரஞ்சித் இயக்கிய, இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகியிருந்தது. 

இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள ஜெய் பீம் படத்திலும் லிஜோமோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 2 தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் லிஜோமோலுக்கு அருண் ஆண்டணி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

வெள்ளத்தால் உருக்குலைந்த கிராமம்! கழுகுப்பார்வை காட்சிகள்! | Uttarakhand | Cloud Burst

சிவகார்த்திகேயன் குரலில் ஓ காட் ஃபியூட்டிஃபுல் பாடல்!

SCROLL FOR NEXT