செய்திகள்

'திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாக பார்க்கின்றனர்' - பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத நமிதா

திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாக பார்ப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து வேதனை தெரிவித்தார். 

DIN

திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாக பார்ப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நமிதா மாரிமுத்து வேதனை தெரிவித்தார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று மற்ற போட்டியாளர்கள் முன்பு தெரிவிக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் பேசுபவர்களின் உரையை மதிப்பிட வேண்டும். 

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார். ஒரு திருநங்கையை போட்டியாளராக தேர்ந்தெடுத்ததற்கு விஜய் டிவியை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் போட்டியாளர்கள் முன்பு பேசும் நமிதா, '', ஒருவர் வாழ்க்கையில் குறையிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும் என்று என் அம்மா சொல்வார். ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அடித்தார்கள்.

சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பிச்சை எடுப்பவராகவும் பார்க்கிறார்கள். எல்லோரும் என்னை மாறுங்கள் என்கிறார்கள். முதலில் நீங்கள் மாறுங்கள். நாங்கள் எப்பொழுதோ மாறிவிட்டோம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.  அவர் பேச்சைக் கேட்கும் மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT