செய்திகள்

பிரபல நடிகையை காரில் கடத்த முயன்ற ஓட்டுநர்?: பரபரப்புத் தகவல்

DIN

தன்னைத் தவறாக பேசியதாக நடிகை சஞ்சனா கல்ராணி மீது வாடகை கார் ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தற்போது கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். கடந்த வருடம் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். 

இந்த நிலையில் பெங்களூரு இந்திரா நகரில் இருந்து வாடகை காரில் படப்பிடிப்பிற்கு கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது காரில் ஏ.சி போடும் விவகாரம் தொடர்பாக ஓட்டுநருக்கும், சஞ்சனாவிற்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஓட்டுநரை சஞ்சனா தகாத வாத்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து நடிகை சஞ்சனாவின் மீது ஓட்டுநர் சூசை மணி என்பவர் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் திட்டும் போது எடுக்கப்பட்ட விடியோ ஆதாரங்களையும் ஓட்டுநர் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. 

இந்த விவகாரம் குறித்து பேசிய சஞ்சனா, ராஜராஜேஸ்வரி நகருக்கு வாடகைக் காரில் சென்றேன். எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. என்னிடம் பணம் இல்லாததால் வாடகை காரில் சென்றேன். ராஜராஜேஸ்வரி நகருக்கு செல்வதற்கு பதில் கெங்கேரி நோக்கி கார் சென்றது. இதனால் என்னை கடத்தி செல்வதாக நினைத்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. நான் தவறேதும் செய்யவில்லை. 

நான் மேக்கப் போடாததால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அதனால் ஓட்டுநருக்கு நான் நடிகை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தவறான பாதையில் சென்றதால் நான் கண்டித்தேன். அதனால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். நான் நடிகை என்ற காரணத்தால் இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT