செய்திகள்

''எனக்கு கதாநாயகியாகும் ஆசையில்லை'': பிக்பாஸில் பவானி உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவிடம் பவானி உருக்கமாக பேசும் ப்ரமோ விடியோ வெளியாகியுள்ளது.  

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை இசைவாணியிடம் பேசிக்கொண்டிருந்தார் பவானி ரெட்டி. அப்போது இசைவாணி, பவானியிடம் உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த பவானி, ஆகிவிட்டது. ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபொழுது எனக்கு அழுகை வரவில்லை. நான் அதிர்ச்சியைடைந்தேன். என்று உருக்கமாக பேசினார். அவருக்கு இசைவாணி ஆறுதல் கூறினார். 

இந்த நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரமோவில் மதுமிதாவும் பவானியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது அழுதபடியே பேசும், நான் அவரையே (கணவரை) தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு திரைப்பட கதாநாயகியாக வேண்டும் என்ற பெரிய ஆசையெல்லாம் இல்லை.

சாகும் வரை ஏதொவொரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழுகிறார். அப்போது அங்கே வரும் பிரியங்கா, எதற்கு இப்பொழுது அழுகிறாய் ? என்று கேட்க, அவரிடம் ஆந்திரா சாப்பாடு வேண்டும் என்று சமாளிக்கிறார். பின்னர் பிரியங்கா, பவானியிடம் நகைச்சுவையாக பேசி அவரை தேற்றுகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT