முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தை பெரிய தொகை கொடுத்து கைப்பற்றிய சன் டிவி

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் நாளை (அக்டோபர் 9) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டு வெளியாகும் முதல் பெரிய கதாநாயகனின் படம் டாக்டர் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் தற்போது நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மத்தியிலும் டாக்டர் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் டாக்டர் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடிக்கான உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் படத்தை தொலைக்காட்சி உரிமை ரூ.12 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை ரூ.13 கோடிக்கும் சன் டிவி நிறைவனம் வாங்கியுள்ளதாம். 

ஆனால் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் இல்லை. டாக்டர் படத்தின் டிரெய்லரை சன் டிவி நிறுவனம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் படத்தில் அனிருத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், யோகி பாபு, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →