செய்திகள்

பாதியில் நிறுத்தப்படும் இரண்டு ஜி தமிழ் தொடர்கள் : தொலைக்காட்சியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி - காரணம் என்ன?

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் முடிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜி தமிழ் தொலைக்காட்சி தொடர்களுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. குறிப்பாக இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்று. இந்தத் தொடருக்கென ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் பக்கங்களை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

அதுபோலவே ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரும ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இரு தொடர்களும் தவிர்க்க முடியாத காரணங்களால் முடிக்கப்படுவதாக ஜி தமிழ் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ''அன்பான நேயர்களுக்கு வணக்கம், உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. எதிர்பாராத காரணங்களால் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய இரண்டு தொடர்களை வரும் வாரங்களில் இருந்து நிறுத்த உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இரண்டு தொடர்களின் கடைசி அத்தியாயங்கள் அக்டோபர் 24 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்படும். தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT