முகப்பு
செய்திகள்

பவானியின் குற்றச்சாட்டு : பிக்பாஸ் வீட்டில் துவங்கிய பிரச்னை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தனி குழுவாக இயங்குவதாக பவானி ரெட்டி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனித்தனி குழுவாக இயங்குவதாக பவானி ரெட்டி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் என்பதால் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எவிக்சன் மூலம் வெளியேற்றப்படவில்லை. ஆனால் எதிர்பாராத விதமாக நமிதா வெளியேறினார். 

பிக்பாஸ் அவருக்கு ரெட் வழங்கியது என்றும், நமிதாவுக்கு கரோனா என்றும் பல தகவல்கள் உலா வந்தன. ஆனால் நமிதா உடல் நலக் குறைவு காரணமாகவே வெளியேறியதாக அவரது தோழி தெரிவித்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

Advertisement

இந்த நிலையில் அடுத்த வாரம் எவிக்சன் இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் இன்று நாமினேசன் செய்யத் துவங்கினர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து, நாதியா, நிரூப், இமான் அண்ணாச்சி, இசைவானி, பிரியங்கா, அபினெய், அபிஷேக், அக்சரா ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்றனர். 

இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரமோவில்,  இசைவாணியிடம் பேசும் பவானி, இங்கு குருப்பிஸம் இருக்கிறது. நான் போய் பேசும்போது, என்னை பார்த்தவுடன் தவிர்க்கும் விதமாக வேறு விஷயங்களை பேசுகிறார்கள். இங்கே தனித்தனி குழுவாக இருக்கிறார்கள் என்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments