சமந்தாவை அக்கா என்றே அழைப்பேன் என பிரபல உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் விளக்கமளித்துள்ளார்.
நடிகை சமந்தா - நாக சைதன்யா பிரிவுக்கு ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. உடை வடிவமைப்பாளருடன் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. மேலும் நாக சைதன்யா தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் பழகும் விதம் சமந்தாவுக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே இருவரும் பிரிவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து விளக்கமளித்த சமந்தா, விவாகரத்து வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படிக்க | வசூலை வாரிக் குவிக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் : இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
சமந்தா நெருக்கமாக பழுகுவதாக கூறப்பட்ட உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கர் என்பவர் இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சமந்தா என் சகோதரி போன்றவர். அவரை அக்கா என்றே அழைப்பேன். இது நாக சைதன்யாவுக்கும் தெரியும். என்னுடன் சமந்தாவை தொடர்புபடுத்தி பேசும்போது நாக சைதன்யா இதுகுறித்து பேச வேண்டியது அவசியம். என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.