செய்திகள்

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சந்தானம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்

சந்தானம் நடித்து வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

DIN

சந்தானம் நடித்து வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. இருப்பினும் இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், பேர் வச்சாலும் சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. 

இந்த நிலையில் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் பதிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், மனோஜ் பீதாவின் வஞ்சகர் உலகம் படத்தை நான் மிகவும் ரசித்தேன். தற்போது இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT