செய்திகள்

செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷுக்கு ஜோடி யார் தெரியுமா? : வெளியான புகைப்படம்

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகியப் படங்கள் காலம் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ன. யாரடி நீ மோகின் திரைப்படம் கூட தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய படத்தின் தமிழ் தழுவல் தான். எனவே அதனையும் சேர்த்துக்கொண்டால் இருவர் கூட்டணியில் 5 படங்கள் வெளியாகியுள்ளன. 

தற்போது 6வது முறையாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணி நானே வருவேன் படத்துக்காக இணைந்துள்ளன. இந்தப் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 16) முதல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் செல்வராகவன், தனுஷ், கஸ்தூரி ராஜா, தனுஷின் அம்மா, நடிகை இந்துஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இதனையடுத்து இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்தப் படத்தின் தலைப்பு மாற்றப்படுவதாக கூறப்பட்ட நிலையில், நானே வருவேன் என்ற தலைப்புடனேயே இன்று புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT