செய்திகள்

''அந்த விடியோவை தர உடனடியாக சம்மதித்தார், ஜோதிகா..'' - தோனியுடனான சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்துகொண்ட சூர்யா

தோனியுடனான சுவாரசியமான சம்பவத்தை நடிகர் சூர்யா பகிர்ந்துகொண்டார். 

DIN

சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள ஜெய் பீம் படத்தின் டீசர் நேற்று (அக்டோபர் 16) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஞானவேல்
இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் சூர்யா ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.  அப்போது பேசிய அவர், ரசிகர்களின் அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று நான் தவித்திருக்கிறேன். ஆனால் அதனைத் தோனி தவறவிட்டதில்லை.

15 ரன்கள் எடுக்கிறார். ஆனால் அவர் எப்பொழுது அந்த 15 ரன்களை பெறுகிறார் என்பது முக்கியம். 8 வயது குழந்தை அழுகிறது. உடனே அவர் பந்தில் அவரது கையொப்பம் இட்டு அந்த குழந்தையிடம் விட்டெறிகிறார். அந்த குழந்தை அந்தப் பந்தை பார்த்து மகிழ்கிறது. அந்த குழந்தையின் வாழ்வில் அந்த தருணம் மறக்க முடியாததாக இருக்கும். 

ஜோதிகா அவரை சந்திக்க வேண்டும் என்றபோது, அவர் நேரம் ஒதுக்கி பார்த்தார். 24 படத்தில் அவருடன் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சி
படமாக்கப்பட்டது. அதற்காக அவர் அனுமதி அளித்தார். அதற்கு முன் அப்படி நடந்தது கிடையாது.அந்த விடியோ அளிப்பதற்கு உடனடியாக சம்மதித்தார்.
என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT