முகப்பு
செய்திகள்

'எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால்...'' - பிக்பாஸில் நடிகர் வருண் உருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய வருண், இக்கட்டான நேரத்தில் தனது குடும்பத்தினருக்கு எம்ஜிஆர் செய்த உதவி குறித்து தெரிவித்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய வருண், இக்கட்டான நேரத்தில் தனது குடும்பத்தினருக்கு எம்ஜிஆர் செய்த உதவி குறித்து தெரிவித்தார்.

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொரு வரும் தங்கள் கடந்து வந்த பாதையை மிக உருக்கமாக மற்ற போட்டியாளர்கள் முன்பு தெரிவித்தனர். அதில் பெரும்பாலானோரின் கதைகள் பார்வையாளர்களைக் கண்கலங்க வைத்தது. 

இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் பேரனும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் உறவினருமான வருண் கலந்துகொண்டிருக்கிறார். தலைவா, ஒரு நாள் இரவில் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள வருண், கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. 

இந்த நிலையில் பிக்பாஸில் பேசிய வருண், என் தாத்தா ஐசரி வேலனுக்கு என் அம்மா, சித்தி, மாமா ஐசரி கணேஷ் உட்பட 4 பிள்ளைகள். எனது தாத்த நாடகத்தில் நடித்து விட்டு சம்பாதித்து கொடுக்கும் காசில் தான் எங்கள் குடும்பத்தினர் ஒரு  வேளையாவது நிம்மதியாக சாப்பிட்டுள்ளனர். நாடகம் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும்போதே என் தாத்தா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். 

இதனால் எங்களது குடும்பம் சுமார் ரூ.7 லட்சம் கடனில் சிக்கிக்கொண்டது. எம்ஜிஆர் தான் நிதி அளித்து உதவினார். எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால் எங்கள் குடும்பம் அப்போதே காலியாகி இருக்கும். மாமா ஐசரி கணேஷ் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தார் என்று உருக்கமாக பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.