செய்திகள்

'மெட்டி ஒலி' தொடர் புகழ் நடிகை உமா மகேஸ்வரி மரணம்

'மெட்டி ஒலி' தொடர் புகழ் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

DIN

'மெட்டி ஒலி' தொடர் புகழ் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் 'மெட்டி ஒலி'. 2002-2005 வரை மூன்று ஆண்டுகள் 811 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அப்போதைய சாதனைத் தொடராக இருந்தது. திருமுருகன் இயக்கத்தில் உருவான இத்தொடரில் திருமுருகன், டெல்லி குமார், போஸ் வெங்கட், காவேரி, காயத்ரி, சஞ்சீவி, வனஜா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4-வது மகளாக நடித்தவர்தான் உமா மகேஸ்வரி.திருமுருகனுக்கு ஜோடியாக  'விஜி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். உமாவின் நடிப்பும் இத்தொடரில் அதிகம் பேசப்பட்டது. 

அதன்பின்னர், 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இவரது கணவர் ஒரு கால்நடை மருத்துவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. 

உமா மகேஸ்வரியின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்முறையால் நேபாள உள் துறை அமைச்சர் ராஜிநாமா!

ஓமனை வீழ்த்தியது இந்தியா: வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!

2கே கேர்ள்... அனுஷ்கா!

ராமரை காணச் செல்கிறேன்:செங்ககோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 08.09.25 |Sengottaiyan | MKStalin

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT