செய்திகள்

நடிகர் விஜய் குறித்து 'பீஸ்ட்' கதாநாயகி பூஜா சொன்ன வார்த்தை: உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தெரிவித்தார். 

DIN

நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தெரிவித்தார். 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நெல்சனின் டாக்டர் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த பூஜா, ஒரு வார்த்தையில் பதில் சொல்வது கடினம். இருப்பினும் முயற்சிகிறேன். அவர் மிகவும் இனிமையானவர் என்று பதிலளித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தில் டிக்டாக் பிரபலம் காயத்ரி ஷான், யோகி பாபு, விடிவி கணேஷ், ஷைன் டாம் சக்கோ, அபர்னா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT