செய்திகள்

'மெட்டி ஒலி' உமாவின் மறைவுக்கு காரணம் இதுதான் : பிரபல நடிகை உருக்கம்

மெட்டி ஒலி புகழ் உமா மகேஸ்வரியின் மறைவு குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

DIN

மெட்டி ஒலி புகழ் உமா மகேஸ்வரியின் மறைவு குறித்து நடிகை சாந்தி வில்லியம்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். 

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் விஜி என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபமானவர் உமா மகேஸ்வரி. இதனையடுத்து ஒரு கதையின் கதை, மஞ்சள் மகிமை உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். மேலும் அல்லி அர்ஜூனா, வெற்றிக் கொடி கட்டு, உன்னை நினைத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 17) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருக்கு மஞ்சள் காமாலை இருந்ததாகவும் அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தததாகவும் கூறப்படுகிறது. அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில்,  உமாவுடன் மெட்டி ஒலி தொடரில் நடித்திருந்த சாந்தி வில்லியம்ஸ் அவரது மறைவு குறித்து தெரிவித்ததாவது, 'உமா மகேஸ்வரி எனது மகளை போன்றவள். அவரது மறைவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன் விஜே சித்ரா இளம் வயதில் மரணமடைந்தார். தற்போது உமாவும் நம்மிடம் இல்லை. 

கடந்த சில மாதங்களாக உமா மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் தகுந்த சிகிச்சைகள் எடுத்துக்கொண்டு முற்றிலும் குணமானார். அதனால் அவரது மறைவு என்னால் நம்பமுடியாததாக இருக்கிறது'' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT