முகப்பு
செய்திகள்

செல்வராகவன் - தனுஷ் கூட்டணியின் நானே வருவேன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 16) பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இந்துஜா நடிக்கிறார். 

வி கிரியேசன்ஸ் சார்பாக தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்க, யாமினி ஒளிப்பதிவு செய்கிறார். முதலில் இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வார் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபு கடைசியாக தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தில் நடித்திருந்தார். பொதுவாக செல்வராகவன் தனது படங்களில் நகைச்சுவை நடிகர்களைப் பயன்படுத்தமாட்டார். அதனால் இந்தப் படத்தில் யோகி பாபு குணச்சித்திர வேடத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →