செய்திகள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'டாக்டர்' பட 'செல்லம்மா' பாடல் விடியோ இதோ

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா பாடல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

DIN

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து செல்லம்மா பாடல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. வெளியாகி இரண்டு வாரங்களுக்கு பிறகும் சில திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்தப் படத்துக்கு அனிருத்தின் இசையும், விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும் பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் இறுதியில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பாடல் முடிந்த பிறகே ரசிகர்கள் திரையரங்கை விட்டு வெளியேறினர். அந்தப் பாடல் எப்பொழுது யுடியூபில் வெளியாகும் என்று ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்திருந்தது. 

இந்த நிலையில் அந்தப் பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலின் அரங்கம் மாரி 2வின் ரௌடி பேபி பாடலையும், அல வைக்குந்தபுரமுலோ படத்தின் புட்ட பொம்மா பாடலைப் போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT