செய்திகள்

'14 வருடங்கள் ஆச்சு, இன்னும் மக்கள் பருத்திவீரனை மறக்கல' - மதுரைக்கு வந்துள்ள கார்த்தி பகிர்ந்த புகைப்படம்: எதுக்கு தெரியுமா?

விருமன் படத்துக்காக நடிகர் கார்த்தி மதுரை வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

DIN

விருமன் படத்துக்காக நடிகர் கார்த்தி மதுரை வந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத் தேவன் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கின்றன. 

இந்தப் படத்தையடுத்து இரும்புத்திரை, ஹீரோ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் விருமன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். 

இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி நடிக்கவிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 14 வருடங்களுக்குப் பிறகு விருமன் படத்துக்காக மதுரை வந்துள்ளேன். இன்னும் மக்கள் பருத்திவீரன் படத்தைப் பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மக்கள் காட்டும் அன்பு இன்னும் மாறவில்லை. என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு: ஐடி பங்குகள் ஏற்றம்!

நோ மேரேஜ்! டாம் க்ரூஸைப் பிரிந்த அனா டி அர்மாஸ்?

சமூக வலைத்தள விடியோவில் ஏஐ மூலம் குரலை காப்பி எடுத்து மோசடி! தப்புவது எப்படி?

கெட்டி மேளம் தொடரில் சாயா சிங்கிற்கு ஜோடியாகும் ஸ்ரீகுமார்!

மகளிர் உலகக் கோப்பை: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT