செய்திகள்

இனி இவருக்கு பதில் இவர் !: விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன் மாற்றம்

காற்றுக்கென்ன வேலி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

காற்றுக்கென்ன வேலி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடர் கடந்த ஜனவரியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் முக்கியமானது. இந்தத் தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து வரும் பிரியங்கா குமார் மற்றும் சூர்யா தர்ஷன் ஆகியோருக்காகவே இந்தத் தொடரை பார்ப்பவர்கள் அதிகம். 

ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் வெண்ணிலாவுக்கு அவரது அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். இதனையடுத்து கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நினைவாக்க வெண்ணிலா எவ்வாறு போராடுகிறார் என்பதே காற்றுக்கென்ன வேலி தொடரின் கதை. 

இந்த நிலையில் இந்தத் தொடரில் சூர்யாவாக நடித்து வரும் சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சுவாமிநாதன் அனந்தராமன் நடிக்கவிருக்கிறார். சுவாமிநாதன் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சூர்யா தர்ஷன் மாற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூர்யா  - வெண்ணிலா ஜோடியை பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது ரசிகர்களின் சமூக வலைதள பதிவுகளைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT