செய்திகள்

விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா'வின் புதிய கண்ணம்மா இவரா ?: வெளியான தகவல்: யார் தெரியுமா?

பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷ்னிக்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பாரதி கண்ணம்மா தொடரில் ரோஷ்னிக்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் இருந்து கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷ்னி விலகவிருப்பதாக கடந்த ஒருவாரமாக தகவல் வெளியாகி வருகிறது. 

நடிகை ரோஷ்னிக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் வருவதாகவும், அதன் காரணமாகவே அவர் அந்தத் தொடரை விட்டு விலகுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் ரோஷ்னி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் நடிகை ரோஷ்னிக்குப் பதிலாக அந்தத் தொடரில் வினுஷா என்பவர் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது 'என் 4' என்ற படத்தில் நடித்துள்ளார். ரோஷ்னிக்கு பதிலாக அந்த வேடத்தில் வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

SCROLL FOR NEXT