செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

DIN

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மனைவி லதா ரரஜினிகாந்த் கூறியுள்ளதாவது, ''ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆண்டுக்கு ஒருமுறை அவருக்கு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் வீடு திரும்புவார்'' என்று தெரிவித்தார். 

முன்னதாக தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற 67வது திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT