ஞாயிறன்று புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு 
செய்திகள்

ஞாயிறன்று புனித் ராஜ்குமாரின் இறுதிச் சடங்கு

கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகனும் கன்னட திரைப்பட நடிகருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 46.

DIN

பெங்களூரு: கன்னட திரைப்படத்துறையில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். இவரது இளைய மகனும் கன்னட திரைப்பட நடிகருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 46.

அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிறன்று நடைபெறும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் ஏராளமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, இன்று மாலை இறுதிச் சடங்கு செய்யும் முடிவு மாற்றப்பட்டுள்ளது.

இன்று நாள் முழுவதும், புனித் ராஜ்குமார் உடலுக்கு அவரது ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு, நாளை இறுதிச் சடங்குகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள கண்டீருவா மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கன்னடத் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கிய புனித் ராஜ்குமாருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள கண்டீருவா விளையாட்டு மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவரும் ரசிகர்களின் துயரம் போலவே வரிசையும் முடிவின்றி நீண்டுள்ளது.

கண்ணீருடன் அஞ்சலி செலுத்தக் காத்திருக்கும் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் திணறி வருகிறார்கள்.  திரையில் தோன்றி பல முறை தங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய புனீத் ராஜ்குமாரின் உடலை இறுதியாக ஒரு முறை பார்த்து அஞ்சலி செலுத்திவிட மாட்டோமா என்ற தவிப்புடன் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

புனீத்ராஜ்குமாரின் உடல்,  அவரது தாய் மற்றும் தந்தையின் நினைவிடங்களுக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT