செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபல தமிழ் நடிகர்: கசிந்த தகவல்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியில் பிரபல நடிகர் மகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக்பாஸ் சீஸன் 5 நிகழ்ச்சியில் பிரபல நடிகர் மகேந்திரன் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முன்னோட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) வெளியானது. ஆனால் நிகழ்ச்சி எப்பொழுது முதல் துவங்கும் என்பது குறித்த தகவல்கள் அதில் குறிப்பிடவில்லை. 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வருகின்றன. அதில், குக் வித் கோமாளி புகழ் கனி, சுனிதா, டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து, 'துள்ளுவதோ இளமை' படப் புகழ் அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, '90எம்எல்' புகழ் மசூன் சங்கர், சூஷன் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நம் மனங்களை கவர்ந்த நடிகர் மகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்களா?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மகேந்திரன், ''வாழ்க்கையே பிக்பாஸ் மாதிரி தான், இதில் தனியா பிக்பாஸ் வேறயா?'' என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில், விஜய் சேதுபதியின் சிறிய வயது வேடத்தில் நடிகர் மகேந்திரன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு விமரசர்கர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT