செய்திகள்

'பாரதி கண்ணம்மா' தொடரில் முக்கிய மாற்றம்

'பாரதி கண்ணம்மா' என்ற தொடரில் அகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்குப் பதிலாக சுகேஷ் என்பவர் நடிக்கிறார். 

எஸ். கார்த்திகேயன்

'பாரதி கண்ணம்மா' என்ற தொடரில் அகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்தவருக்குப் பதிலாக சுகேஷ் என்பவர் நடிக்கிறார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமானது 'பாரதி கண்ணம்மா'. இந்தத் தொடர் குறித்த செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இந்த நிலையில் இந்தத் தொடரில் முதன்மை வேடத்தில் நடிக்கும் அகிலன் சில காரணங்களால் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்தத் தகவல் தொடர்ந்து அந்தத் தொடரை பார்க்கும் நடிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. இந்த நிலையில் அகிலனுக்குப் பதிலாக சுகேஷ் என்பவர் அந்தத் தொடரில் நடிக்கிறார். சுகேஷ் என்பவர் நடிக்கும் காட்சிகள் நேற்று முதல் (புதன்கிழமை) ஒளிபரப்பாகின. 

இந்த நிலையில் சுகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அகிலன் ரசிகர்களுக்கு என்னை ஏற்றுக்கொள்வது சற்று கடினமாக இருக்கும்.  உங்கள் எல்லோரின் ஆசிர்வாதமும் தேவை என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT