முகப்பு
செய்திகள்

தனுஷ் படத்தில் இருந்து லீக்கான பாடல் ? : வைரலாகும் நடன விடியோ

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தனுஷ் - நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

செய்திகள்

தனுஷ் படத்தில் இருந்து லீக்கான பாடல் ? : வைரலாகும் நடன விடியோ

திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து தனுஷ் - நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து தனுஷ் - நித்யா மேனன் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

நடிகர் தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். 

இந்தப் படத்துக்கு தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைவதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதன் ஒரு பகுதியாக 'மின்சாரக் கனவு' படப் பாடலான வெண்ணிலவே பாடல் பின்னணியில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இணைந்து நடனமாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டதா ? அல்லது படக் காட்சி லீக்கானதா ? என்பது குறித்து தகவல் இல்லை. படக்காட்சி என்றால் உடனடியாக நீக்கப்பட்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க, இருவரும் மிக அழகாக நடனமாடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →