செய்திகள்

''அங்காடித் தெரு கனவு நிறைவேறியது'' - வசந்த பாலன் நெகிழ்ச்சி

DIN

தனது 'அங்காடித் தெரு' திரைப்படக் கனவு நிறைவேறியதாக இயக்குநர் வசந்த பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'அங்காடித் தெரு'. சென்னையில் ஆடை விற்பனைக் கடை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள் அனுபவிக்கும் துயரத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்தது இந்தப் படம். 

இந்த நிலையில் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், ''தமிழக அரசுக்கு நன்றி. என் 'அங்காடித் தெரு' திரைப்படத்தின் கனவு மெல்ல, மெல்ல நிறைவேறுகிறது. 'அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT