செய்திகள்

''தயவுசெய்து என் பெயரை நீக்கிவிடுங்கள்... '' - தமிழ் பிக்பாஸ் 5 குறித்து பிரபல நடிகை தடாலடி

DIN

தயவுசெய்து என் பெயரை அந்தப் பட்டியிலில் இருந்து நீக்கிவிடுங்கள் என பிக்பாஸ் சீசன் 5 குறித்து நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் குறித்து தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 5வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் வெளியிட்டது. 

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் பரவின. அந்த வகையில் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, துள்ளுவதோ இளமை படப் புகழ் அபினய், நடிகை ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, சூசன், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ''என்னுடைய பெயரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் பார்த்தேன். நான் 5வது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தயவுசெய்து என் பெயரை அந்தப் பட்டியலில் இருந்து நீக்குங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT