முகப்பு
செய்திகள்

காதலருடன் இணைந்து ரூ.200 கோடி மோசடி: பிரபல தமிழ் நடிகை கைது

பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நடிகை லீனா மரியா பால் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட நடிகை லீனா மரியா பால் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தொழில் அதிபர் ஷிவிந்தர் மோகன் சிங் என்பவரது மனைவி அதிதி மும்பை திட்டமிட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரில், தனது கணவருக்கு பிணை வாங்கித் தருவதாகக் கூறி கும்பல் ஒன்று தன்னிடம் ரூ. 200 கோடி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

சுகேஷ் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கில் சுகேஷிற்கு உதவியாக செயல்பட்டு வந்த அவரது காதலரும் நடிகையுமான லீனா மரியா பால் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கம்லேஷ் கோத்தாரி, சாமுவேல், அருண் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தற்போது அவர்களை நீதிமன்றக் காவலில் எடுத்து, இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லீனா மரியா பால் தமிழில் பிரியாணி, மெட்ராஸ் கஃபே ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →