அறிமுக இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் அறிமுக நடிகர் சதீஷ் குமார், மிருணாளினி ரவி போன்றோர் நடித்துள்ள பட்ம் - ஜாங்கோ. ஒளிப்பதிவு - கார்த்திக் கே தில்லை, படத்தொகுப்பு - சான் லோகேஷ், இசை - ஜிப்ரான். சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஜாங்கோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகி மிருணாளினி ரவி பேசியதாவது:
இந்தப் படத்துக்காக என்னை அழைத்தபோது சி.வி. குமார் தயாரிப்பு எனச் சொன்னார்கள். அவருடைய படங்களின் பெரிய ரசிகை நான். உடனே கதை கேட்கத் தயாரானேன். இயக்குநர் மிகவும் திறமைசாலி. இந்தப் படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் வழங்கியதற்கு நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரானின் பாடல்களுக்கு ஒருகாலத்தில் நான் டிக்டாக் செய்துள்ளேன். இன்று எனக்காக இரு பாடல்கள் வழங்கியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒளிப்பதிவாளர் கார்த்தி என்னை அழகாகக் காண்பித்துள்ளார். இரவில் தூக்கக் கலக்கத்தில் நான் சோர்வாக இருப்பேன். ஆனால் எப்படி என்னை இவ்வளவு அழகாகக் காண்பித்தார் என எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுபோன்ற புதிய கதைகள், புதுமுகங்களுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.