செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த: முதல் பார்வை போஸ்டர் குறித்த அதிகாரபூர்வத் தகவல்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது. 

DIN

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது. 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். 

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - வெற்றி, இசை - இமான்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பார்வை போஸ்டர் நாளை காலை 11 மணிக்கும் காணொளி போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கும் வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT