முகப்பு
செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ரசிகர்களுக்காகவும் எங்கள் அன்பான திரையரங்கு உரிமையாளர்களுக்காகவும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - டாக்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன. 

டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு ரமலான் சமயத்தில் வெளியாகும் என அதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டது. கரோனா பரவல் காரணமாக அதன் வெளியீடு மேலும் ஒத்திவைக்கப்பட்டது.

ஓடிடியில் வெளியாவதாக எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்காகவும் எங்கள் அன்பான திரையரங்கு உரிமையாளர்களுக்காகவும் டாக்டர் படத்தை அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →