செய்திகள்

எஸ்.எஸ். ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் வெளியீடு ஒத்திவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை எங்களால் அறிவிக்க முடியாது...

DIN

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் ஹிந்திப் பதிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஆங்கிலம், கொரியன் உள்பட வெளிநாட்டு மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. தொலைக்காட்சி உரிமை ஜீ சினிமா (ஹிந்தி), ஸ்டார் (தெலுங்கு), விஜய் டிவி (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் (கன்னடம்) போன்றவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைப் படக்குழு அறிவித்துள்ளது. ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்ததாவது:

படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் கிட்டத்தட்ட முடிந்து, அக்டோபரில் படத்தை வெளியிடத் தயாராகவே இருந்தோம். ஆனால் படத்தின் வெளியீட்டைத் தற்போது ஒத்திவைக்கிறோம். திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை எங்களால் அறிவிக்க முடியாது. உலக சினிமா மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்போது படத்தை வெகுசீக்கிரமாக வெளியிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2கே கேர்ள்... அனுஷ்கா!

ராமரை காணச் செல்கிறேன்:செங்ககோட்டையன்! | செய்திகள்: சில வரிகளில் | 08.09.25 |Sengottaiyan | MKStalin

சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

அழகான ராட்சஷி... ஜாக்குலின்!

அடுத்த 3 மணிநேரத்துக்கு 8 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT