செய்திகள்

மனைவி சமந்தாவுக்கு பதிலளித்த நாக சைதன்யா: முடிவுக்கு வந்ததா சர்ச்சை ?

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி பட முன்னோட்டத்துக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவியின் லவ் ஸ்டோரி பட முன்னோட்டத்துக்கு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாக சைதன்யா தற்போது சாய் பல்லவியுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் திங்கள்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னோட்டத்தை நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் பகிர்ந்த சமந்தா, சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஒரு சில ரசிகர்கள் ஏன் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இருப்பினும் சமந்தா அதற்கு பதிலளிக்கவில்லை. 

இதனையடுத்து சமந்தாவுக்கு நாக சைதன்யா நன்றி தெரிவித்தார். முன்னதாக இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் சமூக வலைதளங்களில் சகஜமாக பேசிக்கொள்வது  ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் அவர்களிடமே நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT