செய்திகள்

சன் டிவி தொடரில் மீண்டும் களமிறங்கும் லிவிங்ஸ்டன் மகள் : முக்கிய வேடத்தில் அம்பிகா

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சன் டிவி தொடரில் மீண்டும் நாயகியாக களமிறங்கவிருக்கிறார். 

DIN


நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சன் டிவி தொடரில் மீண்டும் நாயகியாக களமிறங்கவிருக்கிறார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் ஜோவிதா. இவர் பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பூவே உனக்காக தொடரில் அவரது வேடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறினார். மேற்படிப்புக்காக அந்தத் தொடரில் இருந்து விலகியதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால் பூவே உனக்காக தயாரிப்பு தரப்புக்கும் அவருக்கும் இடையே பிரச்னை காரணமாகவே அவர் விலகியதாக கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில் அவர் மீண்டும் சன் டிவி தொடரில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். 

இந்தத் தொடரானது, கஸ்தூரி நிவசா என்ற கன்னட தொடர் ஒன்றின் மறு உருவாக்கம் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடரில் நடிகை அம்பிகா முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடரில் கார்த்திக் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT