ஓடிடியில் வெளியாகும் பி.எம். நரேந்திர மோடி படம்!
நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு...
செய்திகள்ஓடிடியில் வெளியாகும் பி.எம். நரேந்திர மோடி படம்!
நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு...
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, பி.எம். நரேந்திர மோடி என்கிற திரைப்படமாக 2019-ல் வெளியானது. சந்தீப் சிங் தயாரிப்பில் ஒமங் குமார் இயக்கத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓப்ராய் நடித்தார். நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவான இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் உருவாகியிருந்தது.
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் 2019, ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் இந்த திரைப்படத்தை வெளியிட்டால், அது மக்களைத் திசைதிருப்பும் செயலாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் குற்றம்சாட்டியதுடன் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன. இதையடுத்து 2019 மக்களவைத் தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மின்னணு ஊடகங்களில் எந்தக் கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்கிற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்தத் தடையை விதித்தது. தேர்தல் நடந்து முடிந்தபிறகு மே 24 அன்று இத்திரைப்படம் இந்தியா முழுக்க வெளியானது.
இந்நிலையில் பி.எம். நரேந்திர மோடி படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. எம்.எக்ஸ். பிளேயர் ஓடிடியில் செப்டம்பர் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடியில் படத்தைக் காண கட்டணம் எதுவும் தேவையில்லை.