செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம்: அனுமதியளித்த நடிகர் விஜய் ?

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

வருகிற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த்தின் தலைமையில் 20 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் விரைவில் நடைபெறவிருக்கிற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இது கருதப்படுகிறது. கடந்த வருடம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சி ஒன்றை பதிவு செய்தார். அப்போது விஜய் அதற்கும் தனக்கும் அந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT