விஜய் படத்தின் புதிய அப்டேட்: இயக்குநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய்யின் 66-வது படத்தைத் தான் இயக்கப்போவதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் வம்சி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் 66-வது படத்தைத் தான் இயக்கப்போவதாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் வம்சி ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விஜய்யின் 66-வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. அந்தத் தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வெளியான சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட முன்னோட்ட விடியோ
விஜய்யின் 66-வது படத்தைத் தானே இயக்கப்போவதாக இயக்குநர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இப்படத்தைத் தயாரிப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
2007-இல் முன்னா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் வம்சி. தமிழில் வெளியான தோழா உள்பட 5 படங்களை அவர் இயக்கியுள்ளார். 2019-இல் மகேஷ் பாபு நடிப்பில் வம்சி இயக்கிய மஹர்ஷி, சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.