செய்திகள்

முதன்முறையாக தனது மகளின் பெயரை அறிவித்த ஆர்யா : வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

தனது மகளின் பெயரை முதன்முறையாக நடிகர் ஆர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.

DIN

தனது மகளின் பெயரை முதன்முறையாக நடிகர் ஆர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்தார்.

ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியினருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இதனை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்த விஷால், தான் மாமாவாகிவிட்டதாகக் கூறி, இருவருக்கும் வாழ்தது தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெண் குழந்தைகள் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்கள் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். 

அந்த வகையில் நடிகர் ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''அப்பாவாக இரண்டு மாதங்களை கழித்துவிட்டேன். மகள்கள் தின வாழ்த்துகள் அரியானா'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு மூலம் அரியானா என்ற தனது மகளின் பெயரை முதன் முதலாக அறிவித்துள்ளார். 

ஆர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனையடுத்து ஆர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள எனிமி, அரண்மனை 3 படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரண்டு படங்களும் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT