செய்திகள்

சமந்தா கணவரைப் பிரிவது உறுதியானதா ?: அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சி

நாக சைதன்யாவின் குடும்ப நிகழ்வுகளில் சமந்தா கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

நாக சைதன்யாவின் குடும்ப நிகழ்வுகளில் சமந்தா கலந்துகொள்ளாதது ரசிகர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடிகை சமந்தாவின் விவாகரத்து செய்தி தான் திரையுலகில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நாக சைதன்யா - சமந்தா இடையேயான விவாகரத்து செய்தி உறுதி என்றும், சமந்தாவுக்கு நாக சைதன்யா ரூ.50 கோடியை ஜீவனாம்சமாக அளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.  இது எதுவும்  உறுதிப்படுத்தாத தகவல்களாகவே இருந்து வருகின்றன. 

கடந்த வாரம் வெளியான  நாக சைதன்யா - சாய் பல்லவி இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படம் வெற்றி பெற சமந்தா தனது சுட்டுரைப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நாக சைதன்யா நன்றி கூறினார். இதனால் இருவரது விவாகரத்து செய்திகள் ஓரளவுக்கு அடங்கியது. 

மேலும், சமந்தாவின் மாமனாரான நாகர்ஜூனா, தனது அப்பா நாகேஸ்வரரராவ் குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்கு சமந்தா, 'இது மிக அழகாக இருக்கிறது மாமா' என்று வாழ்த்து கூறினார்.

இதனையடுத்து நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கு இடையேயான விவகாரத்து செய்தி வெறும் வதந்தி என்றே ரசிகர்கள் முடிவுக்கு வந்தனர். 

இந்த நிலையில், நாக சைதன்யாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்துகொள்ளாத சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், நடிகர் நாக சைதன்யா ஹிந்தியில் ஆமிர் கானுடன் இணைந்து 'லால் சிங் சட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யா வீட்டில் நாகர்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினர் முன்னிலையில் ஆமிர்கானுக்கு விருந்தளிக்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த விழாவிலும்  சமந்தா கலந்துகொள்ளதாதது ரசிகர்களின் சந்தேகத்தை வலுப்பெறச் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT