முகப்பு
செய்திகள்

உடல் எடை குறைந்த பிரபு மற்றும் குஷ்பு : சின்ன தம்பி 2 குறித்து கேட்ட ரசிகர்: குஷ்புவின் பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

பிரபு மற்றும் குஷ்புவின் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சின்ன தம்பி 2 படம் குறித்து வேண்டுகோள் விடுத்த ரசிகருக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
பகிர்:

பிரபு மற்றும் குஷ்புவின் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சின்ன தம்பி 2 படம் குறித்து வேண்டுகோள் விடுத்த ரசிகருக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். 

சமீபத்தில் நடிகர் பிரபுவின் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. பொன்னியின் செல்வன் படத்துக்காக அவர் எடை குறைந்ததாகக் கூறப்பட்டது.  மேலும் நடிகை குஷ்புவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எடை குறைந்த நிலையில் முன்பை விட ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் எடைந்த குறைந்த நிலையில் இருக்கும் பிரபு மற்றும் குஷ்புவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, இயக்குநர் வாசு சார், சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு முன், சின்னத்தம்பி இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகை குஷ்பு சிரிப்பது போன்ற ஸ்மைலியை பதிலாக அளித்துள்ளார். 

Advertisement

உண்மையில் சின்னத்தம்பி 2 இப்பொழுது எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதே ரசிகர்கள் பலரது கருத்தாக இருக்கிறது. பி.வாசு இயக்கத்தில் பிரபு - குஷ்பு இணைந்து நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991 ஆம் வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments